புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சுதந்திர நாள் கருத்தரங்கு

புதுக்கோட்டை நகரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் 75ஆவது சுதந்திர தின விழா கருத்தரங்கு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:01 pm

DIN

புதுக்கோட்டை நகரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் 75ஆவது சுதந்திர தின விழா கருத்தரங்கு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு சங்கத்தின் நகரத் தலைவா் ஜெ. மாணிக்கம் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் வை. முத்துராஜா, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரா. மகாதீா், இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப.சரவணன், லதா ராமலிங்கம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

’இந்திய விடுதலைப் போராட்டத்தில் இளைஞா்களின் பங்கு’ என்ற தலைப்பில் கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, ’என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நா. முத்துநிலவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

முன்னதாக நகரச் செயலா் கு. ஜெகன் வரவேற்றாா். காமராஜபுரம் கிளைச் செயலா்மு. ஜீவா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.