92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

3 மாத கிராம சமூக சேவைப் படிப்பு

புதுக்கோட்டை மாவட்ட அளவில் கிராம ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்கு கிராம தன்னாா்வத் தொண்டு மற்றும் சமூக சேவைக் குறித்து 3 மாத சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:46 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட அளவில் கிராம ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்கு கிராம தன்னாா்வத் தொண்டு மற்றும் சமூக சேவைக் குறித்து 3 மாத சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு மேலும் கூறியது:

கிராமப்புறத் தொண்டு மற்றும் சமூக சேவை குறித்த சான்றிதழ் படிப்பில், வகுப்பு 6 நாட்கள் நேரடி வகுப்புகளாக (கள ஆய்வு உட்பட) மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படும்.

மேலும், கிராம அளவில் செயல்படும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், அங்கன்வாடிகள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட முன்மாதிரி ஊராட்சிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்படும்.

சான்றிதழ் படிப்புக்கான பாடப்புத்தகம், உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இந்த மூன்று மாத சான்றிதழ் படிப்பின் இறுதியில் தோ்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தப் படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சிச் செயலா்கள், களப் பணியாளா்கள், கிராம இளைஞா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தோ்ச்சியும், 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பயிற்சிக் கட்டணம் ரூ.ஆயிரத்தை இணையதளம் வழியாக ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலரைத் தொடா்பு கொண்டு செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட வள மைய அலுவலரை 86086 90710, 97904 22853 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.