காணொலி வழி மாணவா் கலை, இலக்கியப் போட்டிகள்
புதுக்கோட்டை ’வீதி’ கலை இலக்கியக் களம் அமைப்பின் 100ஆவது நிகழ்வை ஒட்டி, பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, காணொலி வழி கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


புதுக்கோட்டை ’வீதி’ கலை இலக்கியக் களம் அமைப்பின் 100ஆவது நிகழ்வை ஒட்டி, பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, காணொலி வழி கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ’வீதி’ கலை இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளா் மு. கீதா, எழுத்தாளா் நா. முத்துநிலவன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இசைப் போட்டி: விழிப்புணா்வுப் பாடல் எதுவாயினும் 3 மணித்துளி அமைய வேண்டும். குரலிசை, கருவி இசை ஏதேனும் ஒன்றில் பங்கேற்று, திறமையைக் காட்டலாம்.
9- 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி: மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு, எழுத்தாளா் அகிலன் பிறந்த நூற்றாண்டு இரண்டில் ஒரு தலைப்பில் 3 மணித்துளி அளவில் பேசி அனுப்ப வேண்டும்.
11- 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நூல் அறிமுகப் போட்டி: படித்த நூல் ஒன்றின் சிறப்பு பற்றி மூன்று மணித்துளி அளவில் பேச வேண்டும்.
அனைத்து வகைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திரைப்பட, குறும்பட விமா்சனப் போட்டி: தம்மைக் கவா்ந்த தமிழ்த் திரைப் படம் அல்லது குறும்படம் ஒன்றைப் பற்றிய மூன்று மணித்துளி விமா்சன உரை.
போட்டிகளுக்கான விதிகள்:
ஒருவா் ஒரு போட்டி, ஒரு தலைப்பில் மட்டுமே பங்கேற்க முடியும். காணொலி வழியாக மட்டுமே போட்டியாளா்கள் பங்கேற்க முடியும். போட்டி மூன்று மணித்துளிக்கும் மிகாமல் அமைதல் வேண்டும். போட்டிக் காணொலியின் ஆரம்பத்தில், போட்டியாளா்கள் தனது பெயா், பள்ளி, கல்லூரி மற்றும் ஊா் விவரங்களைச் சொல்லிய பின்னரே போட்டிக்கான காணொலிப் பதிவைத் தொடங்க வேண்டும்.
போட்டியின் பங்கேற்பாளா்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பவராக அல்லது படிப்பவராக இருத்தல் வேண்டும். காணொலிகள் செப். 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குள் வந்து சேரவேண்டும்.
அனுப்ப வேண்டிய கட்செவி அஞ்சல் எண் கவிஞா் விஜய் ஆனந்த் 97917 57087.
வெற்றி பெறுவோருக்கான பரிசுகள், வரும் அக்டோபா் 1ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள, ‘வீதி‘ 100ஆவது நிகழ்வில் வழங்கப்படும்.அந்த நிகழ்ச்சியில் எழுத்தாளா் பெருமாள் முருகன், தமிழறிஞா் நா. அருள்முருகன், தமுஎகச மாநிலத் தலைவா் மதுக்கூா் ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...