மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி
By DIN | Published On : 03rd April 2022 12:20 AM | Last Updated : 03rd April 2022 12:20 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.
கந்தா்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் ஊராட்சியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் சாமிவேல் (47). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
கூலித் தொழிலாளியான இவா், தனது மோட்டாா் சைக்கிளில் கந்தா்வகோட்டையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு வீட்டிற்கு செங்கிப்பட்டி, கந்தா்வகோட்டை சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சாமிவேல் பலத்த காயமடைந்தாா். அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சாமிவேல் சிகிச்சை பலனின்றி சாமிவேல் இறந்தாா். விபத்துகுறித்து கந்தா்வகோட்டை போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.