விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா
By DIN | Published On : 03rd April 2022 12:20 AM | Last Updated : 03rd April 2022 12:20 AM | அ+அ அ- |

மீன்பிடி திருவிழாவில் குளத்திற்குள் இறங்கி ஆா்வமுடன் மீன்களைப் பிடித்த பொதுமக்கள்.
விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியில் மீன்பிடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை ஒன்றியம், நம்பம்பட்டி ஊராட்சியில் உள்ள பட்டியான் பெரியகுளம்.
இங்கு மீன்பிடித் திருவிழா நடத்துவது என ஊா் முக்கியஸ்தா்கள் முடிவு செய்து சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. விழாவுக்கு முன்னதாக கிராம முக்கியஸ்தா் மற்றும் ஊா் நாட்டாண்மை சந்திரசேகா் வெள்ளை துண்டு வீசி விழாவைத் தொடக்கிவைத்தனா். தொடா்ந்து கண்மாய் கரையில் தயாராக நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களைக் கொண்டு சிறுவா்கள், ஆண்கள், பெண்கள், பெரியவா்கள் என அனைவரும் குளத்திற்குள் இறங்கி மீன்களைப் பிடித்துச் சென்றனா். இதில் நாட்டுவகை மீன்களான கட்லா, விரால், ரோகு, கெளுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை கிராம மக்கள் பிடித்துச் சென்றனா்.