

புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில் ‘மகாத்மாவை அறிவோம்’ போட்டிகளில் வென்ற சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ராம்ராஜ் காட்டன் வெளியிட்டுள்ள ‘ மகாத்மாவைக் கொண்டாடுவோம்’ நூல்கள் வழங்கி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை‘ மற்றும் ‘வெண்மை’ இதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இப்பரிசளிப்பு நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சுசரிதா தலைமை வகித்தாா். மருத்துவா் ச. ராம்தாஸ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் புதுக்கோட்டை கிளை மேலாளா் எஸ்.என். நாகராஜன், வாசகா் பேரவை ஆலோசனைக் குழு உறுப்பினா் சத்தியராம் ராமுக்கண்ணு, செயலா் சா. விஸ்வநாதன் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
முன்னதாக தமிழாசிரியை கீதா வரவேற்றாா். நிறைவாக தமிழாசிரியை கிருஷ்ணவேணி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.