ராணியாா் பள்ளியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 15th August 2022 12:35 AM | Last Updated : 15th August 2022 12:35 AM | அ+அ அ- |

மாணவா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளா் ராகவி, டீம் மருத்துவமனை தலைமை மருத்துவா் கே.எச். சலீம்.
புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் டாக்டா் கேஎச் சலீம் கலந்து கொண்டு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கேடுகள் குறித்தும் விளக்கிப் பேசினாா். பள்ளி தலைமை ஆசிரியை ர. தமிழரசி தலைமை வகித்தாா். நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் ராகவி, ஆய்வாளா் குருநாதன் ஆகியோா் கலந்து கொண்டு பெண்கள், சிறாா்கள் மீதான வன்கொடுமைகள் குறித்துப் பேசினாா். முன்னதாக உதவித் தலைமை ஆசிரியா் இரா. முத்துக்கருப்பன் வரவேற்றாா். நிறைவில், உதவித் தலைமை ஆசிரியா் காந்தி நன்றி கூறினாா்.