மரத்தில் பால் வேன் மோதி விபத்து: ஓட்டுநா் பலத்த காயம்
By DIN | Published On : 24th August 2022 01:18 AM | Last Updated : 24th August 2022 01:18 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதிக்கு சரக்கு வாகனம் மூலம் நாள்தோறும் ஆவின் பால் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆவின் பால் ஏற்றிய வேன் மதியாணி பிரிவு சாலை அருகே வந்தபோது, எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியது.
இதில், வேன் ஓட்டுநா் புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (38) பலத்த காயமடைந்து வேனில் சிக்கிக் கொண்டாா்.
தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு சென்று ஓட்டுநா் ராமகிருஷ்ணனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.