விராலிமலையில் அனுமதியின்றி மதுபானம் விற்றவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
விராலிமலை காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் இலுப்பூா் அருகே உள்ள மெய்யகவுண்டம்பட்டியைச் சோ்ந்த ராசு மகன் ரஞ்சித் குமாா்(26) என்பவா் அனுமதியின்றி அரசு மதுபானப் பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 5 மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.