பாரதி கல்லூரியில் ரத்த தானம்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீபாரதி மகளிா் கல்விக் குழுமம் மற்றும் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சாா்பில் ரத்த தான முகாம் மற்றும் ரத்த வகை அறியும் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி அலுவலா் மருத்துவா் ஏ. கிஷோா்குமாா், அன்னவாசல் பெஸ்ட் லைப் கோ் மருத்துவமனை மருத்துவா் ஏ. நபிஷா பேகம் ஆகியோா் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினா்.
முதலாம் ஆண்டு சோ்ந்த மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. 100 மாணவிகள், பேராசிரியா்கள் ரத்த தானம் செய்தனா்.
முகாமில், கல்லூரிகளின் தாளாளா்கள் ஏ. லியோபெலிக்ஸ் லூயிஸ், டி. அருள்சாமி, என். கனகராஜன், கே. பஷீா்முகமது, நிா்வாக அறங்காவலா் ஏ. கிருஷ்ணமூா்த்தி, சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் எம். கோபிநாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.