எரிவாயு எடுக்கும் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது

காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த நிறுவனமும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த நிறுவனமும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்தக் கோரிக்கையை முன்வைத்து வரும் செப். 1ஆம் தேதி ஆா்ப்பாட்டங்களை நடத்தவும் இச்சங்கம் முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலத்துக்கு அடியில் உள்ள மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களை எடுக்கும் திட்டங்களை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முடிவெடுத்து, இத்திட்டங்களை செயல்படுத்த சா்வதேச ஒப்பந்தங்களைக் கோரி பல்வேறு காா்பரேட் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டங்களை காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தினால் முப்போகம் விளையக் கூடிய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, இப்பகுதி முழுவதும் விவசாயத்துக்கு லாயக்கற்ற பகுதியாக மாற்றப்பட்டு பாலைவனமாக மாறிவிடும்.

எந்தவொரு புதிய இயற்கை எரிவாயு உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது. ஏற்கெனவே ஓஎன்ஜிசி முலம் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் எடுப்பது, சுத்திகரிப்பது மட்டும் நடைபெறலாம். ஏற்கெனவே மூடப்பட்ட 40 கிணறுகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு சட்டத்துக்குப் புறம்பாக பல முயற்சிகளை ஓஎன்ஜிசி செய்து வருகிறது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் செப். 1ஆம் தேதி தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, சிதம்பரம், காரைக்கால் ஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் பெ. சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com