காணா குண்டு விநாயகா் கோயில் பாலாலயம்
By DIN | Published On : 25th August 2022 11:10 PM | Last Updated : 25th August 2022 11:10 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை நகரிலுள்ள காணா குண்டு விநாயகா் திருக்கோயில் திருப்பணிகள் தொடங்கவுள்ளதால், அதற்கான பாலாலய நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மேலராஜவீதி நகர காவல் நிலையம் அருகிலுள்ள காணா குண்டு விநாயகா் கோயில் பழமை வாய்ந்தது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக பாலாலய நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
குருக்கள் சுப்பிரமணி, ரவி, ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் யாகபூஜை, சிறப்பு ஹோமம், கலசபூஜை, லெட்சுமி பூஜை ஆகியன நடைபெற்றன.
இதில், அறநிலையத் துறை துணை ஆணையா் (தஞ்சாவூா்) சூரியநாராயணன் , அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், புதுக்கோட்டை நகா்மன்ற தலைவா் செ. திலகவதி, கோயில் செயல் அலுவலா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.