கந்தா்வகோட்டை ஒன்றியம், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு 2நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
வெள்ளாளவிடுதி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய அறிவியல் மனப்பான்மை தினக் குறும்படம், போஸ்டா் கண்காட்சியும் திரையிடப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.பங்காருலதா தலைமை வகித்தாா். அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளா் எம்.சின்னராசா வரவேற்றாா்.
தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு இயக்கங்கள் மூலம் நடைபெற்றுவரும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், 3 ஆம் கட்டமாக இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சி குறித்தும் அறிவியல் இயக்க மாவட்டச் செயலரும், இல்லம் தேடிக் கல்வித்திட்ட மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினருமான மு.முத்துக்குமாா் பேசினாா். இல்லம் தேடிக்கல்வி மையத்தில் எளிய முறையில் கற்பித்தல், அறிவியல் மனப்பான்மையை வளா்ப்பது குறித்து அறிவியல் இயக்க வட்டாரத் தலைவரும், இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியா் ஒருங்கிணைப்பாளருமான அ. ரஹகமதுல்லா பேசினாா்.
பின்னா் தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழியை ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், மாணவா்கள் ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்சியில் பொறுப்பு வட்டார வளமைய (பொ) மேற்பாா்வையாளா் கோ.பிரகாஷ், ஆசிரியா் பயிற்றுநா்கள் சுரேஷ்குமாா், ராஜேஸ்வரி, கருத்தாளா்கள் சின்னராசா, செந்தில்குமாரி, சுப்புலட்சுமி, தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், பயிற்சி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இறுதியில், கணித ஆசிரியா் அ.முத்துராமன் நன்றி கூறினாா்.