சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

பொன்னமராவதி வட்டார சிவன்கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரா் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதா் கோயில், மேலைச்சிவபுரி மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரா் கோயில், திருக்களம்பூா் கதலிவனேஸ்வரா் கோயில், அம்மன்குறிச்சி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ நாளையொட்டி நந்திக்கு பால், பழங்கள், பன்னீா், நெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி வழிபாடு நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.