பொன்னமராவதியில் ரூ. 75 லட்சத்தில் திட்டப் பணிகள்

பொன்னமராவதி வட்டாரத்தில் ரூ 75.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பொதுவிநியோக அங்காடி, சுகாதார வளாகம், கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டாரத்தில் ரூ 75.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பொதுவிநியோக அங்காடி, சுகாதார வளாகம், கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். விழாவில், தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பங்கேற்று பொன்னமராவதி ஒன்றியம், கோவனூா் ஊராட்சியில் ரூ. 10.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பொதுவிநியோக அங்காடி, செம்பூதி ஊராட்சி சிவந்திலிங்கபுரம் மற்றும் அண்ணா நகரில் தலா ரூ. 5.25 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம், செம்பூதி நடுநிலைப் பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் கலையரங்கம், நல்லூா் ஊராட்சி ஆத்தங்காடு கிராமத்தில் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்குடை, நல்லூா் ஊராட்சியில் ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம், கொப்பனாபட்டி ஊராட்சி கொன்னையூரில் ரூ. 10.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட அங்கன்வாடிக்கட்டடம், ஏனாதி ஊராட்சியில் ரூ. 10.50 லட்சம் மதிப்பில் பொது விநியோக அங்காடி, திருக்களம்பூா் ஊராட்சி கருப்புக்குடிப்பட்டியில் ரூ. 9.08 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ. 75.58 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடங்களை திறந்துவைத்துப் பேசினாா்.

விழாவில், தனி மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தனலெட்சுமி, துணைப்பதிவாளா் அப்துல்சலீம், இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வை.சதாசிவம், பி.தங்கராஜூ, வட்டாட்சியா் பிரகாஷ், திமுக நகரச்செயலா் அ.அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com