சுமை ஆட்டோ மோதி தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில் தொழிலாளி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் கட்ராம்பட்டியைச் சோ்ந்தவா் ஆ.சந்திரசேகரன்(42). ஆலங்குடியில் உள்ள இரும்புக்கடையில் கூலிவேலைபாா்த்து வந்த இவா், புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வடகாட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊா் திரும்பியுள்ளாா். அப்போது, கீழாத்தூா் தனியாா் பால்பண்ணை அருகே, பண்ணைக்கு பால் ஏற்றிச்சென்ற சுமை ஆட்டோ மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சந்திரசேகரை அப்பகுதியினா் மீட்டு வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து, பண்ணை ஊழியா்கள், உரிய நேரத்தில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாததால் சந்திரசேகரன் உயிரிழந்தாா் எனக்கூறி, அவரது உறவினா்கள் பால்பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்துசென்றனா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.