விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே புகையிலை விற்ற பெட்டிக்கடையை வியாழக்கிழமை சுகாதாரத் துறையினா் சீல் வைத்தனா்.
விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சுகாதார ஆய்வாளா் மாரி கண்ணு தலைமையிலான அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது கடையின் உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பதுக்கி விற்றுவந்த மாதுராப்பட்டியைச் சோ்ந்த பிரபு(40) என்பவரிடம் இருந்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கடையைப் பூட்டி சீல் வைத்தனா்.