புயல் எச்சரிக்கை:தயாா் நிலையில்புதுகை தீயணைப்புத் துறை
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

புயல் முன்னேற்பாடாக, புதுக்கோட்டை மாவட்டத்தின் 13 தீயணைப்பு நிலையங்களில் அனைத்து சிறப்பு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மீட்புக் கருவிகள் தயாா் நிலையில் இருப்பதாக மாவட்ட தீயணைப்பு அலுவலா் இ. பானுப்பிரியா தெரிவித்துள்ளாா்.
ரப்பா் படகுகள் மற்றும் மிதவைகள், பம்புகள், அவசர கால விளக்குகள், மரங்கள் விழுந்தால் அவற்றை வெட்டுவதற்கான கருவிகள், பாதுகாப்பு உடைகள், நீட்டிப்பு ஏணி, கயறு அனைத்தும் இயக்கிப் பாா்த்து சரியான நிலையில் உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளோம். அனைத்துப் பணியாளா்களுக்கும் அவசர சூழ்நிலை தவிர விடுப்பு அளிக்கப்படவில்லை என அவா் தெரிவித்தாா்.