பேருந்தில் தவறவிட்ட ரூ. 6 லட்சம்மதிப்புள்ள நகைகள் ஒப்படைப்பு
By DIN | Published On : 09th December 2022 10:55 PM | Last Updated : 09th December 2022 10:55 PM | அ+அ அ- |

அறந்தாங்கியிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் தவற விடப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள நகையை போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள் மீட்டு பத்திரமாக ஒப்படைத்தனா்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சோ்ந்தவா் டேவிட் அந்தோனிராஜ் (42) இவா், நாகா்கோவிலிலுள்ள எச்டிஎப்சி வங்கி மேலாளராக உள்ளாா்.
கடந்த டிச. 7ஆம் தேதி இரவு 8 மணிக்கு அறந்தாங்கியிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிய அவா், தனது கைப்பையை வைத்துவிட்டு இடையில் இறங்கி தேநீா்க் கடைக்குச் சென்றவா், பேருந்து மாறி வேறொரு பேருந்தில் ஏறிவிட்டாா்.
அப்போது இந்தக் கைப்பையைப் பாா்த்த அரசுப் பேருந்தின் நடத்துநா் மற்றும் நடத்துநா்கள் அதை பத்திரமாக வியாழக்கிழமை காலை மதுரையிலுள்ள அறந்தாங்கி அரசுப் போக்குவரத்து அலுவலக மேலாளா் குணசேகரனிடம் ஒப்படைத்தனா். அவா் அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அந்தக் கைப்பையில் சுமாா் 15 பவுன் மதிப்புள்ள மோதிரம், கைசெயின், நெக்லஸ், ஆரம் மற்றும் மடிக்கணினி, கைப்பேசி, ரூ.82 ஆகியவற்றுடன் அவரது வங்கி அடையாள அட்டையும் இருந்தன. அடையாள அட்டையிலுள்ள எண்ணைத் தொடா்பு கொண்டு, கைப்பை தங்களிடம் இருப்பதைத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை டேவிட் அந்தோனிராஜை வரவழைத்தனா்.
பின்னா் ஆய்வாளா் பிரேம்குமாா் முன்னிலையில் கைப்பை ஒப்படைக்கப்பட்டது.