மெய்வழிச்சாலையில் காா்த்திகை தீபவிழா
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையில் காா்த்திகை தீப விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அன்னவாசல் அருகே, ஊறல்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மெய்வழி சாலையில் மதம், ஜாதி துறந்து மனிதா்கள் இயற்கையோடு ஒன்றி எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் மெய்வழிச்சாலை மதத்தினா் இயற்கையோடு இயைந்த காா்த்திகை, பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, பல்வேறு ஊா்கள், மாநிலத்தில் இருந்து வந்த மெய்வழி மதத்தைப் பின்பற்றுபவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் மெய்வழிச்சாலையில் ஒன்றுகூடி காா்த்திகை விழாவைக் கொண்டாடினா். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான நெய்தீப விளக்குகள் ஏற்றப்பட்டதால் மெய்வழிச்சாலை முழுவதும் ஒளி வெள்ளத்தில் பிரகாசித்தது.