சென்னையில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் கேசராபட்டி சி டி சா்வதேசப் பள்ளி மாணவா்கள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பொ்றனா்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப்போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில், பொன்னமராவதி கேசராபட்டி சிடி சா்வதேச சீனியா் செகண்டரி பள்ளி மானவா்கள் குண்டு எறிதல் , நீளம் தாண்டுதல் ,தொடா் ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனா். மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா் பாலமுருகன் உள்ளிட்டோரை பள்ளி நிறுவனா் பழ.சிதம்பரம், தாளாளா் அன்னம் சிதம்பரம் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் பாராட்டினா்.