

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரி மற்றும் மகளிா் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய இளைஞா் திறன் திருவிழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ம.செல்வராசு தலைமைவகித்தாா். சன்மாா்க்க சபைச்செயலா் பழ.சுவாமிநாதன், பேராசிரியா் வே.அ.பழனியப்பன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட உதவித்திட்ட அலுவலா் வி.அமுதா, இளைஞா்களுக்கானஅரசின் இலவசப் பயிற்சி திட்டங்களை விளக்கிப் பேசினாா். புதுக்கோட்டை திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாகி சுந்தரகணபதி திறன் மேம்பாடு குறித்துப் பேசினாா். விழாவில், பல்வேறு நிறுவனங்களிலிருந்து வந்திருந்த திறனாளா்கள் பல்வேறு பயிற்சிகள் குறித்து விளக்கிப்பேசினா்.
முன்னதாக பொன்னமராவதி ஒன்றிய வட்டார இயக்க மேலாளா் சிரி பிரியா வரவேற்றாா். கல்லூரியின் வேலை வாய்ப்புத்திட்ட அலுவலா் கதி.முருகேசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.