கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
By DIN | Published On : 13th December 2022 01:01 AM | Last Updated : 13th December 2022 01:01 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கிணற்றில் தவறிவிழுந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மச்சுவாடி, ராம்நகரைச் சோ்ந்த பி. ராகுல் (26). சில தினங்களுக்கு முன்பு ஆலங்குடியில் உள்ள அவரது பாட்டி மங்களம் (70) வீட்டுக்கு வந்தாா். இவா், திங்கள்கிழமை காலை வீட்டின் அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்து சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா், கிணற்றில் இருந்து ராகுலை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.