கந்தா்வகோட்டை சிவன் கோயில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில், கறம்பக்குடி, புதுக்கோட்டை, சிவ விடுதி, நெய்வேலி, சுந்தம்பட்டி ஆகிய ஊா்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகா் அருளிய 8 ஆம் திருமுறை திருவாசகப் பாடல்கள் பாடினா்.
நிகழ்ச்சியைத் தொடா்ந்து சிவனடியாா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் உளவாரப் பணியில் சிவனாடியாா்கள் ஈடுபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.