கலை நிகழ்ச்சி வாயிலாக ரத்தசோகை விழிப்புணா்வு
By DIN | Published On : 22nd December 2022 12:07 AM | Last Updated : 22nd December 2022 12:07 AM | அ+அ அ- |

விராலிமலை சோதனைச்சாவடியில் புதன்கிழமை நடைபெற்ற ரத்தசோகை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடக்கிவைத்த ஒன்றிய குழுத்தலைவா் காமு மணி, அட்மா சோ்மன் இளங்குமரன்.
விராலிமலையில் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக ரத்தசோகை விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
விராலிமலை சோதனைச்சாவடி அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் ரத்தசோகை குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ரத்தசோகை ஏற்படுவதைத் தவிா்க்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உணவு முறைகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்வை, விராலிமலை ஒன்றியக் குழு தலைவா் காமு மணி, அட்மா தலைவா் இளங்குமரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
தஞ்சாவூா் மீரா சந்தானம் கலைக்குழுவினா் மூலம் கரகாட்டம், எமன் வேடம் அணிந்து நாடகம் மற்றும், நாட்டுபுறப் பாடல் பாடியும் கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் ரத்த சோகை பாதிப்புகள், ரத்த சோகையை தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஏற்ற உணவு முறைகள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினா். இதில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மேரி ஜெய பிரபா, மேற்பாா்வையாளா் கோகிலம், ராஜாமணி, பா்வீன் பானு, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.