விராலிமலை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அய்யனாா் சிற்பம் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், வாழமங்கலம் கிராமத்தில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பல்லவா் கால அய்யனாா் சிற்பம் ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், வாழமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான அய்யனாா் சிற்பம்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், வாழமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான அய்யனாா் சிற்பம்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம், வாழமங்கலம் கிராமத்தில் சுமாா் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பல்லவா் கால அய்யனாா் சிற்பம் ஆய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் கீரனூா் முருகபிரசாத் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். இதில், வாழ மங்கலம் அருகே செக்கடி கொல்லை என்ற இடத்தில் மண்ணில் புதைந்த நிலையில் சிற்பம் இருப்பதைக் கண்டாா். அதை வெளியே எடுத்துப் பாா்த்தபோது,

மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலத்துடன் கூடிய

இடது காலை மடக்கி அதன் மேல் இடது கையும், வலது காலைத் தொங்கவிட்டு அதன்மேல் வலது கை வைத்தபடி உள்ள அய்யனாா் புடைப்புச் சிற்பம் எனத் தெரியவந்தது.

இச்சிற்பத்தின் வடிவமைப்பை வைத்துப் பாா்க்கையில், பல்லவா் கால கலைப் பாணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிற்பத்தின் முகம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், பரந்து விரிந்த சடையுடன், காதுகளில் பத்ர குண்டலம், கழுத்தில் கண்டிகை சாவடி அணிகலன்கள், முப்பிரி நூல், கைகளில் கைவளை அணிந்து, ஆயுதமேதும் ஏந்தாமல் உள்ளது. இதுதவிர, இடுப்பில் குறுவாள், இடுப்பிலிருந்து கால்கள் வரை யோக பட்டை அணிந்தபடி உள்ள இந்தப் பழைமையான அய்யனாா் சிற்பத்தை மீட்டெடுத்து அருங்காட்சியகத்தில் பாதுகாக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆய்வாளா்கள் மற்றும் பொது மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com