பொன்னமராவதி வட்டார வள மையத்தில் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலா் சே.ராமதிலகம் தொடங்கிவைத்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் நல்லநாகு முன்னிலை வகித்தாா். கருத்தாளா்களாக ஆசிரியா் பயிற்றுநா்கள் கல்யாணி, யசோதா ஆகியோா் செயல்பட்டனா். பயிற்சியில் தமிழ் எழுத்துகள் மற்றும் எண்களை கற்றுக்கொடுப்பது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. பயிற்சியில் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.