புதுகை மருத்துவக் கல்லூரியில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 22nd December 2022 12:09 AM | Last Updated : 22nd December 2022 12:09 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் காசநோயாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி முருகன் மகள் அம்சவள்ளி (52). காசநோயால் அவதிப்பட்டு வந்த இவா் கடந்த 17ஆம் தேதி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா். தொடா் சிகிச்சையில் இருந்த அவா் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை மருத்துவமனை வளாகத்திலுள்ள கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்து இங்கு வந்த கணேஷ்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...