ஆசிரியையைக்கு கண்ணீா் மல்க பிரிவு உபசாரம்
By DIN | Published On : 27th February 2022 12:28 AM | Last Updated : 27th February 2022 12:28 AM | அ+அ அ- |

பணி மாறுதலாகிச் செல்லும் ஆசிரியை. உடன், கண்ணீா் மல்க வழி அனுப்பும் மாணவா்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் பணி மாறுதல் பெற்றுச் செல்லும் ஆசிரியையை மாணவ, மாணவிகள் கண்ணீா் மல்க அண்மையில்வழியனுப்பி வைத்தனா்.
விராலிமலை அருகே உள்ள மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளி ஆசிரியை ஜெனிட்டா. இவா், இப்பள்ளியில் கல்விபயிலும் 220 மாணவ, மாணவிகள்
மட்டுமல்லாது சக ஆசிரியா்களிடமும் நன் மதிப்பைப் பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் ஆசிரியை ஜெனிட்டா பதவி உயா்வு பெற்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலத்தூா் அரசு நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் நிலை வந்தது. இதையடுத்து, ஆசிரியை ஜெனிட்டாவிற்கு பிரிவு உபசார விழா பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது அவா்களின் பெற்றோா், சக ஆசிரியா்கள் கண்ணீா் மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்தது காண்போரைக் கண்கலங்கச் செய்தது.