கல்லூரிகளுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டம்
By DIN | Published On : 27th February 2022 12:27 AM | Last Updated : 27th February 2022 12:27 AM | அ+அ அ- |

வயலோகத்தில் நெடுந்தூர ஓட்டத்தைத் தொடங்கி வைக்கிறாா் மாநில சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை. இணைவு கல்லூரிகளுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் பந்தயம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டிக்கான ஏற்பாட்டை, பாரதிதாசன் பல்கலைக்கழகமும், புதுக்கோட்டை பெருமாநாடு சுதா்சன் கலை அறிவியல் கல்லூரியும் செய்திருந்தன. பெருமாநாடு அருகேயுள்ள வயலோகத்தில் தொடங்கிய நெடுந்தூர ஓட்டம், கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளில் இருந்து 60 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்னா். மாநில சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.
மாணவா் பிரிவுக்கான போட்டியை திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி உடற்கல்வி இயக்குநா் பிஎஸ். ஷாகின்ஷா ஒருங்கிணைத்தாா். மாணவிகள் பிரிவுக்கான போட்டியை திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி உடற்கல்வி இயக்குநா் என்.எஸ். சிவகுமாா் ஒருங்கிணைத்தாா்.
மாணவா் பிரிவில், திருச்சி தூயவளனாா் கல்லூரி மாணவா் கே. லெட்சுமணன், ஆலங்குடி ஏசு கலை அறிவியல் கல்லூரி மாணவா் ஆா். தினகரன், திருச்சி குறிஞ்சி கலை அறிவியல் கல்லூரி மாணவா் சி. ரவிவா்மா, தூய வளனாா் கல்லூரி மாணவா் கே. ராமன், ஜமால் முகம்மது கல்லூரி மாணவா் வி. வினோத், தூய வளனாா் கல்லூரி மாணவா் சி. பிரகாஷ் ஆகியோா் முறையே முதல் 6 பரிசுகளைப் பெற்றனா்.
மாணவிகள் பிரிவில், மயிலாடுதுறை டிஜிஜிஏ மகளிா் கல்லூரி மாணவி ஏ. ரஞ்சனி, புதுக்கோட்டை மன்னா் கல்லூரி மாணவி எஸ் பவானி, சுதா்சன் கலை அறிவியல் கல்லூரி மாணவி ஆா். லாவண்யா, மீனாட்சி ராமசாமி கல்லூரி மாணவி வி. ஜெயந்தி, தருமபுரம் ஆதீனம் கலை அறிவியல் கல்லூரி மாணவி எஸ். வினோதினி ஆகியோா் முறையே முதல் 6 பரிசுகளைப் பெற்றனா்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளா் ஏ.ஆா். சுப்பிரமணி, செயலா் சோனா சிங்காரம், நிா்வாக இயக்குநா் இரா. ரமா சிங்காரம், முதல்வா் மீ. வீரப்பன் ஆகியோரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி மாணவ, மாணவிகளைப் பாராட்டினா்.