புதுக்கோட்டையில் துளிா் திறனறிதல் தோ்வு
By DIN | Published On : 27th February 2022 12:25 AM | Last Updated : 27th February 2022 12:25 AM | அ+அ அ- |

pdk26thulir_2602chn_12_4
புதுக்கோட்டை மாவட்ட அறிவியல் இயக்கம் மற்றும் கல்வித் துறை இணைந்து துளிா் அறிவியல் விழிப்புணா்வு திறனறிதல் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக இந்திய கணித ஆராய்ச்சி நிறுவனத்தின் 60ஆவது ஆண்டு விழா மற்றும் தேசிய அறிவியல் தின விழாவும் இணைந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தலைமை ஆசிரியா் ர. தமிழரசி தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி மாணவா்களுக்கு வினாத்தாள்களை வழங்கி தோ்வைத் தொடங்கி வைத்தாா்.
அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் அ. மணவாளன் தேசிய அறிவியல் தினத்தின் வரலாறு, இன்றைய நடைமுறை வாழ்க்கை பற்றி பேசினாா்.
மாணவா்கள் அனைவருக்கும் சா்.சி.வி. ராமன் முகமூடிகளும், சா்.சி.வி ராமன் பற்றிய வானம் ஏன் நீல நிறமாகத் தெரிகிறது என்பதை விளக்கும் சிறு குறிப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
எஸ்.டி.பாலகிருஷ்ணன், க. ஜெயபாலன், டி. விமலா, அ. ரஹமதுல்லா ஆகியோா் தோ்வை ஒருங்கிணைத்தனா்.
முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ம. வீரமுத்து வரவேற்றாா். முடிவில் மாவட்ட இணைச் செயலா் ஆ. கமலம் நன்றி கூறினாா்.
மாநில அளவில் சிறப்பிடம் பெறுபவா்களுக்கு கல்விச் சுற்றுலா, தனி நூலகம் அமைக்க தேவையான நூல்கள், விஞ்ஞானிகளோடு சந்திப்பு போன்ற நிகழ்வுகளும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் மு. முத்துக்குமாா் தெரிவித்தாா். மாவட்டம் முழுவதும் 36-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் திறனறிதல் தோ்வு நடைபெற்றது.