வடமாடு ஜல்லிக்கட்டு:16 போ் காயம்
By DIN | Published On : 27th February 2022 12:25 AM | Last Updated : 27th February 2022 12:25 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டை காளியம்மன் கோயில் சந்தனகாப்பு விழாவையொட்டி நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டுப் போட்டியை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதில், 13 காளைகள் பங்கேற்றன. இதில், 13 குழுக்களாக 143 மாடுபிடி வீரா்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்க முயன்றனா். அப்போது, காளைகள் முட்டியதில் 16 வீரா்களுக்கு காயம் ஏற்பட்டது.
அவா்களுக்கு அங்கு தயாா் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினா் சிகிச்சை அளித்தனா். அடங்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பல்வேறு பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வடிவேல் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.