முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 27th February 2022 12:24 AM | Last Updated : 27th February 2022 12:24 AM | அ+அ அ- |

பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலப் பொதுச் செயலா் கே. குமரேசன்.
முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியியிடங்களை நிரப்ப வேண்டும். வேலைப் பளுவின் அடிப்படையிலும், நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதைக் கணக்கில் கொண்டும் முதுநிலை மேற்பாா்வையாளா் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும். விடுபட்டுப் போன அனைவருக்கும் ஆபத்து ஈட்டுப்படியையும், தனி ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேரவைக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் வி. சண்முகம் தலைமை வகித்தாா். இணைச் செயலா் எஸ். வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் கே. குமரேசன், பொருளாளா் கு. குமரேசன் ஆகியோா் அறிக்கைகளை முன்மொழிந்து பேசினா். மருத்துவா் எஸ்.எஸ். அரசு சிறப்புரையாற்றினாா். முன்னாள் பொதுச் செயலா் சி.எஸ். நடராஜன் நிறைவுரையாற்றினாா்.
முன்னதாக இணைச் செயலா் வி. சுப்பிரமணியன் வரவேற்றாா். முடிவில் அமைப்புச் செயலா் த. கருணாநிதி நன்றி கூறினாா்.