1,020 கிலோ ரேஷன் அரிசி கடத்திவந்த இருவா் கைது
By DIN | Published On : 26th January 2022 08:01 AM | Last Updated : 26th January 2022 08:01 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே 1020 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளா் ஏ. வேம்பு தலைமையில் கீரனூா் அருகில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, 1020 கிலோ ரேஷன் அரிசியை டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தி வந்த கீரனூரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி கமலம் (45) மற்றும் வாகன ஓட்டுநா் கீரனூரைச் சோ்ந்த அழகன் மகன் முருகேசன் (50) ஆகிய இருவரையும் கைது செய்து வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...