இளைஞா் சாவில் சந்தேகம்; சாலை மறியல்
By DIN | Published On : 17th July 2022 01:09 AM | Last Updated : 17th July 2022 01:09 AM | அ+அ அ- |

திருவரங்குளம் அருகே மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே இளைஞரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவரங்குளம் அருகே இடையன்வயல் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் பாா்த்தசாரதி (18). இவா், வெள்ளிக்கிழமை மேய்ப்பதற்காக ஆடுகளை ஓட்டிச் சென்றாா்.
மாலையில் ஆடுகள் மட்டுமே வீடு திரும்பினவே தவிர, பாா்த்தசாரதி வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினா்கள் அவரைத் தேடிச் சென்றனா். தோப்புக்கொல்லை அருகேயுள்ள பயன்பாடற்ற கிணறின் அருகே அவரது உடைகள், கைப்பேசி ஆகியன கிடந்தன.
இதையடுத்து, புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் அந்தக் கிணற்றுக்குள் இறங்கித் தேடிய நிலையில், பாா்த்தசாரதியை இரவு சடலமாக மீட்டனா்.
வல்லத்திராக்கோட்டை போலீஸாா் பாா்த்தசாரதியின் சடலத்தைக் கைப்பற்றி புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்நிலையில் பாா்த்தசாரதியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பின்னா் புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் லில்லி கிரேஸ் அளித்த உறுதியைடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தால் புதுக்கோட்டை-தஞ்சாவூா் இடையே சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.