குடுமியான்மலை கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 31st July 2022 11:49 PM | Last Updated : 31st July 2022 11:49 PM | அ+அ அ- |

screenshot_2022-07-31-21-27-57-965_com
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடுமியான்மலையில் உள்ள குடைவரைக் கோயிலான சிகாகீரீஸ்வா் அகிலாண்டேசுவரி கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து மண்டகபடி, உபயதாரா்கள் சாா்பில் அம்பாளுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அம்பாள் வீதி உலா நடைபெற்றது. விழாவின் 9 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. காலை 8 மணியளவில் அம்பாள் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து 8.40 மணியளவில் தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனா். முக்கியவீதிகள் வழியே வந்த தோ் 10.10 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடா்ந்து இரவு கோயில் மண்டபத்தில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
Image Caption
படம்