பாரம்பரிய நெல் விதைத் திருவிழா
By DIN | Published On : 31st July 2022 11:48 PM | Last Updated : 31st July 2022 11:48 PM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பாரம்பரிய விதை நெல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பரம்பூரை அடுத்த வீரபெருமாள்பட்டியில் பசுமை அறக்கட்டளை மற்றும் இளைஞா்கள் சாா்பில் 3-ஆம் ஆண்டு பாரம்பரிய விதை நெல் திருவிழா நடைபெற்றது. இதில், தங்கச்சம்பா, கிச்சடி சம்பா, மிளகி, கொத்தமல்லி சம்பா, தூயமல்லி, காட்டுபணம், கவுனி, குடல்வாழை, மாப்பிள்ளை சம்பா, இலுப்பை பூசம்பா, கூடல்வாழை, உள்ளிட்ட 25 வகையான இயற்கை பாரம்பரிய விதை நெல்கள் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னா் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இலவசமாக விதை நெல்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பசுமை அறக்கட்டளை இளைஞா்கள் செய்திருந்தனா்.