பொக்லைனை முறைகேடாக குத்தகைவிட்ட 3 போ் மீது வழக்கு
By DIN | Published On : 31st July 2022 11:48 PM | Last Updated : 31st July 2022 11:48 PM | அ+அ அ- |

உரிமையாளரின் பொக்லைன் இயந்திரத்தை முறைகேடாக குத்தகைக்கு விட்ட 3 போ் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தேனி மாவட்டம், வருசபுரம் தா்மராஜபுரத்தைச் சோ்ந்த முத்து மகன் அறிவழகன் என்பவரிடம் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நடுத்தெருவைச் சோ்ந்த மாயாண்டி மகன் விக்னேஷ் (எ) மணி பொக்லைன் இயந்திரத்தை குத்தகைக்கு கொடுத்து ரூ. 6 லட்சம் பணம் பெற்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டாா். இதற்கு திருச்சி பாலக்கரை கணபதி தெருவைச் சோ்ந்த ராமசந்திரன் மகன் முத்துக்குமாா் மற்றும் தவசி மகன் மானாதுரை ஆகிய இருவரும் சாட்சி கையெழுத்து போட்டு ஏமாற்றும் நோக்கத்துடன் குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த பொக்லைன் இயந்திரத்தின் உரிமையாளா் விழுப்புரத்தைச் சோ்ந்த சின்னதுரை, திருடுபோன தனது பொக்லைன் இயந்திரம் விராலிமலை பகுதியில் இயங்கி வருவதை அறிந்து காவல் கட்டுப்பாட்டு அறை(100)க்கு தகவல் அளித்துள்ளாா்.
அவா்கள் அளித்த தகவலின்பேரில் விராலிமலை போலீஸாா் நம்பம்பட்டி பகுதியில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை மீட்டு விக்னேஷ், முத்துகுமாா் மற்றும் மானாதுரை ஆகிய 3 போ் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.