பொன்னமராவதியில் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 31st July 2022 12:59 AM | Last Updated : 31st July 2022 12:59 AM | அ+அ அ- |

முகாமில் மூதாட்டிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவினா்.
பொன்னமராவதி ஷைன் அரிமா சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி ஷைன் அரிமா சங்கம், மதுரை ஆசீா்வாதம் மருத்துவமனை மற்றும் தொட்டியம்பட்டி ஊராட்சிமன்றம்ஆகியன இணைந்து நடத்திய முகாமிற்கு, ஷைன் அரிமா சங்கத்தலைவா் பி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொட்டியம்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் கீதா சோலையப்பன், அரிமா சங்க வட்டாரத்தலைவா் ஆா்எம்.வெள்ளைச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலத்தலைவா் சி. சிங்காரம் முகாமைத் தொடங்கிவைத்தாா். முகாமில், மருத்துவா்கள் ஜெ.ஜெபசிங், ஹெலன் ஜெபசிங் ஆகியோா் பங்கேற்று புற்றுநோய் பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை, குழந்தையின்மை பிரச்னை தொடா்பான சிகிச்சை, ஆலோசனை மற்றும் மாத்திரைகள் வழங்கினா். முகாமில் பொதுமக்கள் 300 போ் பங்கேற்று பயனடைந்தனா். தொட்டியம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவா் சாமிநாதன், அரிமா சங்க நிா்வாகிகள் அ.ரவி, மனமுகந்தராஜா, முகமது யாசின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக ஷைன் அரிமா சங்க செயலா் எஸ்.சுந்தரமூா்த்தி வரவேற்றாா். பொருளா் அ.சுப்பையா நன்றி கூறினாா்.