விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
By DIN | Published On : 31st July 2022 12:59 AM | Last Updated : 31st July 2022 12:59 AM | அ+அ அ- |

விராலிமலை அருகே விஷம் குடித்து இளம்பெண் உயிரிழந்தாா்.
விராலிமலை அருகே உள்ள வாணதிராயன்பட்டியைச் சோ்ந்தவா் சின்னதுரை மகள் யுவராணி (22). பட்டதாரி. இவருக்கு நீண்ட நாட்களாக தீராத தலைவலி இருந்து வந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனில்லையாம். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி(புதன்கிழமை) மீண்டும் தலைவலியால் அவதிப்பட்டுவந்த அவா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு யுவராணி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து விராலிமலை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.