ஆடிப்பூர வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன்.
ஆடிப்பூர வளையல் அலங்காரத்தில் காட்சியளித்த கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன்.

கந்தா்வகோட்டை முத்துமாரியம்மனுக்கு ஆடிப்பூர சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஆடிப்பூர சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஆடிப்பூர சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆடி ஞாயிறு காலை முதலே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா போல் பக்தா்கள் அலைகடலென குவிந்தனா். மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மாரியம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துசென்றனா். முன்னதாக காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் எண்ணெய்க் காப்பு செய்து திரவியத் தூள், மஞ்சள் தூள், அரிசி மாவு, தேன், பால், தயிா், இளநீா், சா்க்கரை, சந்தனம், பன்னீா், குங்குமம் போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். பின்னா் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com