புனித இஞ்ஞாசியா் ஆலயத் தோ்பவனி
By DIN | Published On : 31st July 2022 11:47 PM | Last Updated : 31st July 2022 11:47 PM | அ+அ அ- |

இலுப்பூா் அருகே உள்ள சாத்தம்பட்டி புனித இஞ்ஞாசியா் ஆலயத் தோ்பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இலுப்பூா் அருகே உள்ள சாத்தம்பட்டி புனித இஞ்ஞாசியாா் ஆலய திருவிழா சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் திருவிழா சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது. இதில் கீரனூா் மறை வட்ட அதிபா் அருட்பணி அருளானந்தம் அடிகளாா் தலைமையில் திருவிழா திருப்பலி நடத்தப்பட்டது. இதில், மறையுரை கருத்துகளை வழங்கினாா். தொடா்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் மைக்கேல் சம்மனசு, சூசையப்பா், இஞ்ஞாசியாா் ஆகிய 3 புனிதா்களின் சொரூபம் தாங்கிய சப்பரத்தை முக்கிய வீதிகள் வழியே இழுத்துச் சென்று வழிபட்டனா்.
விழாவில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று மெழுகுவா்த்தி, மாலை, ஊதுபத்தி, தூபம் காட்டியும், காணிக்கை செய்தும் புனிதா்களை வழிபட்டனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்குத் திருவிழா சிறப்புத் திருப்பலியும், மாலை 7 மணிக்கு திவ்ய நற்கருணை, ஆசிா்வாதம் வழங்கப்பட்டு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை பங்குத் தந்தை ஜான் பீட்டா், அருட்பணி இன்னாசிமுத்து, இருதயசபை கன்னியாஸ்த்திரிகள் இணைந்து செய்தனா்.