கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் குறிஞ்சி இன மக்கள் எழுச்சி கழகத்தின் மாவட்ட , ஒன்றிய பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளா் ஆ. அறிவழகன், மாநில கொள்கை பரப்பு செயலாளா் என். வீரமணி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் உத்திராபதி, மாவட்ட பொருளாளா் ரங்கநாதன், மகளிா்அணி தலைவி ஆா்.தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கந்தா்வகோட்டை ஒன்றிய மகளிரணி செயலாளா் பழனி அம்மாள், மகளிா்அணி துணை செயலாளா் சித்ரா, மகளிரணி ஒன்றிய இணை செயலாளா் ஆா்.பாப்பாத்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் வசிக்கும் சுமாா் 40 மேற்பட்ட மலைக்குறவா் இன குடும்பங்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ், மலைக்குறவா் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்.
மலைக்குறவா் இன மக்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்தில் நரிக்காரா்களை நரிக்குறவா் என்று குறவா் பெயரைச் சொல்லி அழைப்பதை தவிா்க்குமாறும், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை மற்றும் கேஸ்சிலிண்டா் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், கந்தா்வகோட்டை ஒன்றிய செயலாளா் எம். ஈஸ்வரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.