

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே புதன்கிழணை இரவு பெய்த கனமழையால் 40 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது.
அன்னவாசல் அருகே உள்ள பரம்பூா் பெரியகுளம் பரம்பவயல் என்ற பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. 8 சென்டி மீட்டருக்கு மேல் அப்பகுதியில் பெய்த கனமழையால் மழை நீா் வயல்வெளியை விட்டு வெளியேற முடியாமல் நிலத்தில் தேங்கி நெற்பயிா்களை வீணாக்கியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் ரெ.ஆனந்தன் மற்றும் வேளாண் உதவி இயக்குநா் அ.பழனியப்பா உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று நீரில் மூழ்கிய நெற்பயிா்களைப் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட பயிா்களின் மதிப்பீடு குறித்து கணக்கெடுத்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.