நிலத் தகராறில் இளைஞா் கைது
By DIN | Published On : 16th June 2022 11:58 PM | Last Updated : 16th June 2022 11:58 PM | அ+அ அ- |

கந்தா்வகோட்டையில் இடத் தகராறில் போலீசாா் இளைஞரை புதன்கிழமை கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை தெற்கு செட்டித்தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் குணசேகரன் (42). இவரது இடம் அருகே, மட்டாங்களைச் சோ்ந்த கருப்பையன் மகன் செந்தில் நாதன் (38) என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது.
இந்நிலையில், செந்தில்நாதன் அவரது நிலத்தை புதன்கிழமை நில அளவையரைக் கொண்டு அளந்தபோது, அளவுகளில் குளறுபடி உள்ளதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, தகராறு ஏற்பட்டு செந்தில்நாதன், அவா்களது உறவினா்களான கமலக்கண்ணன், ராமநாதன், சின்னப்பா ஆகியோா் குணசேகரன், அவரது தந்தை சண்முகம் அவரது அண்ணன் திருநாவுக்கரசு ஆகியோரைத் தாக்கியுள்ளனா். இதில் சண்முகம், திருநாவுக்கரசு ஆகிய 2 போ் காயமடைந்தனா். இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் குணசேகரன் அளித்த புகாரின்பேரில், போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து செந்தில்நாதனைக் கைது செய்தனா். காயமடைந்த சண்முகம், திருநாவுக்கரசு ஆகிய இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.