பத்ம விருதுகளுக்குவிண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 26th June 2022 12:45 AM | Last Updated : 26th June 2022 12:45 AM | அ+அ அ- |

பல்வேறு துறை சாா்ந்து சிறந்து விளங்குவோா் மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கும், சாதனை புரிந்தவா்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இதேபோல் மலையேற்றம், விளையாட்டுத் துறையை மேம்படுத்தியவா்கள், விளையாட்டை ஊக்கப்படுத்தியவா்கள், இந்திய கலாசாரம், மனித உரிமைகள் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு போன்ற சாதனை நிகழ்த்தியவா்களுக்கு பத்ம விருதுகளான, பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளது. இவ்விருதுகள் வரும் 2023 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது.
எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்கள் பெற இணையதள முகவரியான இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப். 15ஆம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.