அரசுப் பள்ளியில் பணிகள்: அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 30th June 2022 11:37 PM | Last Updated : 30th June 2022 11:37 PM | அ+அ அ- |

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சிகுடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வடகாடு ஊராட்சி புள்ளாச்சிகுசியிருப்பு அரசு தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும், பள்ளியை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் அரசின் பங்களிப்போடு குளிா்சாதன வசதி, ஸ்மாா்ட் வருப்பறை, கலையரங்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளியில் நடைபெற்றுவரும் பணிகளை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளி வளாகத்தில் பேவா் பிளாக் தரைத்தளம் அமைத்துத்தருவதாக உறுதியளித்தாா்.
ஆய்வின்போது, பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.