அறந்தாங்கி, பொன்னமராவதியில் நாளை மின் நிறுத்தம்
By DIN | Published On : 11th March 2022 02:52 AM | Last Updated : 11th March 2022 02:52 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி மற்றும் திருமயம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (மாா்ச் 12) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா்கள் க. தனபால், கா. ராமநாதன் ஆகியோா் அறிவித்துள்ளனா்.
இதனால் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அறந்தாங்கி நகரம், அழியாநிலை, சிலட்டூா், சிதம்பரவிடுதி, குரும்பூா், மறமடக்கி, ரெத்தினக்கோட்டை, ஆளப்பிறந்தான், இடையாா், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சத்தி, குண்டகவயல், நாகுடி, அத்தாணி, தொண்டைமானேந்தல், மேல்மங்கலம், பெருங்காடு, மேலப்பட்டு, திணையாகுடி, கட்டுமாவடி, வல்லாவாரி, அரசா்குளம், சுப்பிரமணியபுரம்.
திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூா், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூா், சவேரியாா்புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூா், கோனாப்பட்டு, துளையானூா், தேத்தாம்பட்டி, வாரியப்பட்டி, கொல்லங்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூா், மேலூா், அம்மன்பட்டி, அரசம்பட்டி, வி. லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் வளாகம்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி வட்டம், கொன்னையூா் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் செவலூா், கோவனூா், செம்பூதி, கொப்பனாபட்டி, ஆலவயல், அம்மன்குறிச்சி, தூத்தூா், தொட்டியம்பட்டி, வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி மற்றும் பொன்னமராவதி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முருகேசன் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...