ராணியாா் பள்ளிக்கு ரூ. 2 லட்சம் அளிப்பு
By DIN | Published On : 18th March 2022 01:30 AM | Last Updated : 18th March 2022 01:30 AM | அ+அ அ- |

புதுக்கோட்டையிலுள்ள ராணியாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் சாா்பில் ரூ. 2 லட்சம் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த நிதிஉதவி அளிக்கப்பட்டுள்ளது. மாநில சட்டத்துறை அமைச்சரும், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான எஸ். ரகுபதியின் சாா்பில் இந்தத் தொகைக்கான காசோலையை கற்பக விநாயகா கல்விக் குழுமச் செயலா் நா. சுப்பிரமணியன் வழங்கினாா். பள்ளியின் ஆசிரியா்கள் திருச்செல்வம், காந்தி, சத்தியநாராயணன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...