மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 02nd May 2022 12:32 AM | Last Updated : 02nd May 2022 12:32 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எம்எல்ஏ மா. சின்னத்துரை.
கந்தா்வகோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட மே தின கிராம சபை கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கந்தா்வகோட்டை ஒன்றியம், புனல்குளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவா் ரேணுகா உதயகுமாா் தலைமையில் மே தின கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னத்துரை முன்னிலை வகித்து கலந்து கொண்டாா்.
ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ரெத்தினவேல் காா்த்திக், வட்டாட்சியா் சி. புவியரசன், வட்டார வளா்ச்சி அலுவலா் ந. காமராஜ், உதவி மின் செயற்பொறியாளா் கே. ராஜ்குமாா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். நிறைவில், ஊராட்சி செயலாளா் ரமேஷ் நன்றி கூறினாா். இதேபோல் கந்தா்வகோட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சி. தமிழ்ச்செல்வி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளா் டி. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 36 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.